இஸ்லாமிய இதயங்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொன்னேரம்!
புதிய இளைய முதற்பிறை
எழில் வானத்தில்
கோலம் வரையக்
காத்திருக்கும் நேரம்!
சுவனத்தின் தென்றல்
ஒருமாத காலம் பூமியை
வலம்வரும் நேரம்!
கொடுமைகள் - வன்மைகள்
தீமைகள் -பகைமை நரகச் சூடுகள்
மாண்டழியும் நேரம்!
இந்த பூலோகம் எங்கணும்
இறைப்புகழிலும்
நபிப் புகழிலும்
நிறையும் நேரம்!
ஒளுவின் துளிகளில்
உண்மைகள் உயிர்க்கும் நேரம்!
அருள்மறை மொழிகளில்
உலகம் குளிக்கும் நேரம்!
சலவாத்துக்களில்
சந்தோசம் கொள்ளும் நேரம்!
தராவீ ஹ் தவங்களில்
பள்ளிவாயில்கள்
அலங்கரிக்கப்படும் நேரம்!
வா வா ரமலானே!
வந்து எங்களை நேர்படுத்து
இடையில் கொஞ்சம்
வளைந்து போன
நெஞ்சங்களச் சீர்படுத்து!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்
TIYA-அமீரகம்
No comments:
Post a Comment