Latest News

39 ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

கலாசார சீரழிவுக்கு வித்திடும் 39 ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என இணைய சேவை வழங்கும் அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இணையதளங்களில் பெருமளவு பரவி வரும் ஆபாசப் படங்களைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இவற்றைத் தடை செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது.

இந்நிலையில் இந்தூரைச் சேர்ந்த கமலேஷ்வாஸ்வானி என்ற வழக்குரைஞர் ஆபாச இணைய தளங்களால் மாணவர்கள், இளைய தலைமுறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் தவறான பாதையில் செல்கின்றனர். இதனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இணையதள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஆபாச விடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே அது போன்ற இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

இணையதள இணைப்புகள் தொலைத் தொடர்புத்துறை மூலம் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஆபாசப் படங்களை வெளியிடும் இணையதளங்களை தொலைத் தொடர்புத்துறை மூலம் முடக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

எந்தெந்த இணைய தளங்கள் ஆபாசப் படங்களை வெளியிடுகின்றன என்பதை தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையம் கண்காணித்தது. இதில் 39 இணைய தளங்கள் முறைகேடாக ஆபாசப் படங்களை வெளியிட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.