ரயில்வே டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை ரயில்வே கடுமையாக்கி உள்ளது.
இதுதொடர்பான விதிமுறைகளில் ரயில் அமைச்சகம் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இது ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விதிமுறையின்படி, டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணத் தொகையைத் திரும்பப் பெற வேண்டுமானால், 48 மணி நேரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். இப்போது 24 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால் அதிகபட்ச தொகையைப் பெற முடியும்.சம்பந்தப்பட்ட ரயில் புறப்படுவதற்கு முன்பு 48 மணி நேரத்துக்குள் அதேநேரம் 6 மணி நோரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் மட்டுமே 75 சதவீத கட்டணத்தை திரும்பப் பெற முடியும். இப்போது 4 மணி நேரம் முன்னதாக ரத்து செய்தால் போதும்.
இதுபோல, ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்துக்குள் அல்லது புறப்பட்ட 2 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50 சதவீத கட்டணத்தைத் திரும்பப் பெற முடியும். இப்போது உள்ள விதிமுறைப்படி 500 கி.மீ. அல்லது அதற்கு மேல் பயணம் செய்வதற்கான டிக்கெட்டாக இருந்தால் ரயில் புறப்பட்ட 12 மணி நேரம் வரை ரத்து செய்து 50 சதவீத கட்டணத்தைத் திரும்பப் பெற முடியும். அதேநேரம், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டாக இருந்தால் ரயில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் இருக்கையை விரைவாக உறுதி செய்யவும் விதிமுறைகளை ரயில்வே துறை கடுமையாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment