இளைஞர்கள் எப்போதும் செல்பேசியை வைத்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பதை பார்க்கும் பெற்றோர் அவர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி என்னத்தான் இருக்கோ இந்த செல்பேசியில் என்று. ஆனால், உத்தர்கண்டில் ஒரு இளைஞர் தான் வைத்திருந்த செல்பேசியின் உதவியோடு 2 ஆயிரம் பேரைக் காப்பாற்றியுள்ளார்.
அதாவது, உத்தர்கண்ட் மாநிலத்தை வெள்ளம் தாக்கிய போது, ஜங்கிள் சாட்டி என்ற பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் சிக்கிக் கொண்டனர். சாலைப் பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில், மீட்புப் படையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், அதில் இருந்த ஜெயேஷ் என்ற இளைஞர், அவர்கள் சிக்கியிருந்த பகுதியை ஒரு வெள்ளைத் தாளில் வரைந்து, அதனை செல்பேசியில் படம் பிடித்து, அந்த படத்தை தனது நண்பருக்கு அனுப்பி வைத்தார்.
அந்த படத்தை அவரது நண்பர், உத்தர்கண்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை ஐ.ஜியிடம் கொடுக்க, அதனை வைத்து, மீட்புப் படையினர், அப்பகுதிக்கு விரைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்களுக்கு உணவு, குடிநீர் அளிக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஜெயேஷின் சமயோஜித புத்தியை, மீட்புக் குழுவினர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment