திருச்சி: முசிறி அருகே கணவன், 2 மகன்களை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓடிய இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(37). திருச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவருக்கும் துறையூரை அடுத்துள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகள் கீதாவுக்கும்(27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு சரவணன் (7), சபரி (5) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மாமியாருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கீதா சூரம்பட்டியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து மகன்களுடன் தங்கினார். திருச்சியில் தங்கி வேலை பார்க்கும் மூர்த்தி மாதம் ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி, மகன்களை பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் கீதாவுக்கும் காங்கேயம் ஓலப்பாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்த் (41) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1 ஆண்டு காலமாக கள்ளக்காதல் விவகாரம் நடந்துள்ளது. இது குறித்து அறிந்த மூர்த்தி கீதாவை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை கீதா வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலுடன் தும்பலம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள முள்காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து ஆனந்த் அவருக்கு தாலி கட்டியுள்ளார். அங்கிருந்து இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிட்டனர். அப்படி இருக்கையில் திடீர் என்று ஆனந்த் மட்டும் தலையில் அடித்துக் கொண்டும், அழுதும் கொண்டும் முள்காட்டில் இருந்து ஓடி வந்துள்ளார். அப்போது கோவில் அருகே நின்றிருந்தவர்கள் முள்காட்டுக்குள் சென்று பார்த்தபோது கீதா வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து பார்த்துவிட்டு கீதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட ஆனந்த் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க முயன்றார். பொது மக்கள் அவரைப் பிடித்து முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே கீதா இறந்தது பற்றி அறிந்து அவரது உறவினர்கள் வந்து உடலை சூரம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர்.
இறுதி ஊர்வலம் புறப்படும் முன்பு அங்கு சென்ற முசிறி போலீசார் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனந்திடம் விசாரித்ததில், அவர் திருச்சி நவல்பட்டு பர்மா காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் என்பதும், அவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.
No comments:
Post a Comment