தோஹா: கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி தனது அதிகாரத்தை தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அளிக்கவிருக்கிறார். அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்று கத்தார். அதன் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி(61). அவர் கடந்த 1995ம் ஆண்டு மன்னராக இருந்த தனது தந்தையின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கத்தாரின் புதிய மன்னர் ஆனார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு கத்தாரை நவீனமயமாக்கினார்.
மேலும் பிற நாடுகளுடனான உறவையும் மேம்படுத்தினார். இந்நிலையில் அவர் தனது மகன் இங்கிலாந்தில் படித்த இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை மன்னராக்க விரும்புகிறார். அவர் இது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடித்தியுள்ளார். அதிகாரம் மாற்றம் குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது. 33 வயதாகும் இளவரசர் தமீம் கத்தார் ஆயுதப்படையின் துணை கமாண்டராக உள்ளார். 2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கத்தார் எண்ணெய் வளமிக்கத்து என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment