சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி இருக்கிறது. ராஜ்யசபா தேர்தல் தமிழகத்தில் 27-ந் தேதி நடைபெறுகிறது. 6 இடங்களுக்கான தேர்தலில் அதிமுக அணியின் 5 வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு 27 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரி இருந்தன. தேமுதிகவின் கோரிக்கையை நிராகரித்த காங்கிரஸ், திமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் திமுகவின் கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தேமுதிகவின் வேட்பாளருக்கு 22 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரோ அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று அறிவித்துவிட்டனர்.
இதனால் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment