அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்” ( WCC ) சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாளான நேற்று ( 22-03-2012 ) வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது.
இத்தொடர் போட்டியில் அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC, ABCC, ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும் XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற்று சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளின் விவரங்கள் :
1. முதல் பரிசு : பாப்பாநாடு அணியினர்
2. இரண்டாம் பரிசு : அதிரை WCC அணியினர்
3. மூன்றாம் பரிசு : அதிரை AFFC அணியினர்
4. நான்காம் பரிசு : மதுக்கூர் அணியினர்
மேலும் போட்டிகளில் விளையாடி தங்களின் தனித்திறமைகளை வெளிபடுத்திய விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா நிகழ்ச்சிகளை அதிரை WCC அணியின் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துருந்தனர்.
போட்டிகளில் வெற்றிப்பெற்ற மற்றும் பங்குபெற்ற அனைத்து அணியினர்க்கும் என் வாழ்த்துகள்.
ReplyDeleteபோட்டியினை மிக சிறப்பான முறையில் நடத்தி முடித்த WCC நிர்வாகத்தினருக்கும் பரிசுகள் வழங்கி சிறபித்த நல்யுள்ளம் கொண்ட நண்பர்களுக்கும் விளையாட்டில் பங்கெடுத்து கொண்ட அத்தனை ஊர் நண்பர்களுக்கும் இந்த விளையாடினை கான வந்து ஆக்கமும் ஊக்கமும் தந்த பார்வையாலருக்கும் சிறப்பு விருந்தினருக்கும் அதிரை டியாவின் (TIYA)வின் சார்பாக மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்
ReplyDeleteபோட்டிகளில் வெற்றிப்பெற்ற
ReplyDeleteஅணியினர்க்கு பாராட்டுக்கள்..
போட்டியில் பங்குபெற்ற மற்றும் மிக சிறப்பான முறையில் விளையா வெற்றிப்பெற்ற அணியினர்க்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்
ReplyDeleteபோட்டில் வெற்றிப்பெற்ற அணியினர்க்கு எனது பாராட்டுக்கள்..
ReplyDelete