Latest News

  

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் (AAMF ) – நான்காவது கூட்டம் !

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக நான்காவது கூட்டமாக இன்று ( 23-03-2012 )  அஸர் தொழுகைப்பின் நமதூர் கீழத்தெரு சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, M.M.S. சேக் நசுருதீன் ( தலைவர் – AAMF )அவர்கள் தலைமையில், பேராசிரியர்  M.A. முகமது அப்துல் காதர் ( செயலாளர் – AAMF ) அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக பேருராட்சி தலைவர் S.H அஸ்லாம், சகோ. அக்பர் ஹாஜியார், ஆசிரியர் சகோ. முகமது அலியார் ஆகியோர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பமானது. 

நிகழ்ச்சியின் நிரலாக...........................
சகோ. அதிரை அஹமது அவர்களால் கிராஅத் ஓதுப்பட்டது.
அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி நல்லிணக்க குழு சார்பாக கடந்த 24/02/2012  அன்று நமதூர் தரகர் தெருவில் உள்ள “முகைதீன் ஜும்ஆ பள்ளி“ வளாகத்தில் S.M.A.  அக்பர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அல் அமீன் ஜாமிஆ பள்ளி சம்மந்தமான வழக்குகள் கோர்ட்டில் இருப்பதால் அதிரை அல் அமீன் ஜாமிஆ பள்ளி மற்றும் அதிரை பேரூராட்சி ஆகிய இரு நிர்வாகத்தினரும் தங்களின் சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் தங்களால் போட்டப்பட்ட வழக்குகளை இரு தரப்பினரும் வாபஸ் பெறுவது என்றும் இதற்காக அல் அமீன் ஜாமிஆ பள்ளி நிர்வாகத்திற்கு இரண்டு மூன்று நாள்கள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சுமூக முடிவை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டது.

இத் தீர்மானத்திற்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அன்சாரி, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) சார்பாக தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், பொருளாளர் சகோ. பரகத் அலி மற்றும் அதிரை சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர்கள் கையொப்பமிட்டு உறுதிசெய்தனர்.

இதன் தொடர்ச்சியாக அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாக கமிட்டி உதவித் தலைவர் சகோ. அகமது அன்சாரி அவர்களால் சில நாட்களுக்கு முன்பாக வழக்கு சம்பந்தமான “தன்னிலை விளக்கம்” ஓன்று நோட்டிசாக விநியோகிக்கப்பட்டது ( விரைவில் இவை பதிவுக்குள் கொண்டுவரப்படும் )

AAMF ன் சார்பாக இந்த நோட்டிசை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக இப்பிரச்சனையை AAMF கையிலெடுத்து சுமுகமாக தீர்த்து வைப்பது என்றும் இதற்காக தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுங்கப்பட்டு கீழ்க்கண்ட குழு ஓன்று நியமணம் செய்யப்பட்டது.

அதிரை அஹமது
M. நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )
P.M.K. தாஜுதீன்
மான் A. நெய்னா முகமது
K. யாஹியா கான்
J. சாகுல் ஹமீது
A. முகமது மொய்தீன்
E. வாப்பு மரைக்காயர்
T.A. அகமது அனஸ்

மேலும் கூடுதலாக AAMF ன் தலைவர் M.M.S. சேக் நசுருதீன், செயலாளர் பேராசிரியர் சகோ. முகமது அப்துல் காதர், சகோ. S.M.A.  அக்பர் ஹாஜியார், M. A. அஹமது ஹாஜா மற்றும் பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்கள் இக்குழுவில் இடம்பெற்று சமரசம் ஏற்பட உறுதுணையாக இருப்பார்கள்.

இக்குழு விரைவில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் நிர்வாகத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை தொடங்கும்  ( இன்ஷா அல்லாஹ் ! 
சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்றக் AAMF ’ன் இரண்டாவது கூட்டத்தில் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்து வருகிற கட்டிட பணியாளர்களின் கூலிகளை நிர்ணயம் செய்வது மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது போன்றவைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் சகோ. K. சலீம் ( தாஜுல் இஸ்லாம் சங்கம் ) அவர்களின் தலைமையில் தலா ஒருவர் வீதம் ஒன்பது முஹல்லாவிலிருந்தும் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் பிரகாரம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு  AAMF ன் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சார்பாக அனைத்து முஹல்லா நிர்வாகிகளுக்கும் “நினைவூட்டல் கடிதம்” அனுப்பப்பட்டு, அதில் நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நமதூரில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்வது தொடர்பாக அறிவிப்பு செய்வது என ஆலோசிக்கப்பட்டது.
நமதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக நமதூரைச் சேர்ந்த சகோதர்கள் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்கள் படுகிற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்குகளிலிருந்து இவர்களை விடுவிக்க முயற்சி செய்வது தொடர்பாக ஏற்கனவே இவ்வழக்குகளை கையாள்வதற்காக சகோ. மான் A. நெய்னா முகமது ( துணை-பொருளாளர் – கீழத்தெரு முஹல்லா ) அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கிற்காக கீழத்தெரு முஹல்லா நிர்வாகத்தினர் சார்பாக ருபாய் 5000/- நிதி உதவி ஆசிரியர் சகோ. முகமது அலியார் அவர்களின் முன்னிலையில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (AAMF ) நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை ஆனந்தா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் உரிமையாளர்கள் கொடுத்த மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தக்வா பள்ளி மீன் மார்க்கெட் சம்பந்தமாக இரு தரப்பினர்கள் இடையே சமீபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வைக் கருத்தில் கொண்டு இருதரப்பினர்களிடேயே சமரசம் ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுமுகமாக முடித்து தந்த சகோ. சேக்தாவுது ( கீழத்தெரு முஹல்லா ) மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர் சகோ. அஸ்லாம் ஆகியோர்களுக்கு AAMF ன் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதிரை வர்த்தக சங்க செயலாளர் சகோ. N.A. முகமது யூசூப் அவர்களால் அரசு மருத்துவமனை இரவு நேர சேவை, அதிரை ரயில் நிலையத்தில் கணினி முன் பதிவு அலுவலகம் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ள, SDPI மற்றும் த.மு.மு.க. ஆகிய இரு சமுதாய அமைப்புகளுக்குள் சமிபத்தில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வை மறந்து அவர்களிடேய ஒற்றுமையை ஏற்படுத்துவது, பெரிய ஜும்மா பள்ளியில் “சுகாதார விழிப்புணர்வு அறிவிப்பு” போன்றவைகள் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுவை எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்ட “கீழத்தெரு முஹல்லா“ நிர்வாகத்தினற்கு வாழ்த்துகள் பரிமாறப்பட்டு துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

குறிப்பு :
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ( AAMF ) சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது முஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் வீதம் எனவும், இதன்படி அடுத்த கூட்டமாக “ கடற்கரைத்தெரு முஹல்லாவில் “ வருகிற 04-05-2012  அன்று நடைபெறும் ( இன்ஷா அல்லாஹ் ! ) இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
 Posted in: NIJAM
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

2 comments:

  1. இன்ஷா அல்லாஹ் இந்த கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன். இதை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது இது போன்று எப்போதும் எல்லா விசையங்களில் நமது அனைத்து முஹல்லாவும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக

    ReplyDelete
  2. விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விசயங்களின் கரு மட்டுமே கட்டுரையில் உள்ளது. அதன் முழு விபரமும் எழுதினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.