துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமும், கொழும்பில் இருந்து திருவனந்தபுரம் வந்த இலங்கை ஏர்லைன்ஸ் விமானமும் ஒரே ஓடுதளத்தில் வந்ததால் பரபரப்பும் குழப்பமும் நீடித்தது. எமிரேட்ஸ் விமானம் 241 பயணிகளுடன் 32 வது ஓடுதளத்தில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டது.அதேபோல் இலங்கை விமானமும் 154 பயணிளுடன் வந்தபோது அதே ஓடுதளத்தில் காலை 11.11 மணிக்கு தரையிரங்கியது. இதையரிந்த திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் கொழும்பு ஏர்லைன்ஸ் விமானிக்கு தரையிரக்கவேண்டாம் என தகவல் தெரிவித்தனர். இதனால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.
இரண்டு விமானிகளுக்குமிடையே தவறான தகவல் பரிமாற்றம் அல்லது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் தவறு நடந்ததன் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கொடுக்கும் புகாரின் பேரில் இச்சம்பவத்திற்குரிய காரணம் குறித்து விமான போக்குவரத்து இயக்குனர் விசாரணை மேற்கொள்வார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து கொழும்பில் இருந்து வந்தத விமானம் பத்திரமாக தரையிரங்கியது.1 1

No comments:
Post a Comment