
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து
வருகிறது. மே 2-ம் தேதி 3.68 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
நிலையில், நேற்று (மே 3) 3.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 02 லட்சத்து 82
ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணிநேரத்தில் 3,20,289 பேர் கொரோனா பாதிப்பில்
இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 66
லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியது. 34.47 லட்சம் பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இதுவரை 2,22,408 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 81.91 சதவீதமாகவும்,
உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 16.99
சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று
(மே 3) ஒரே நாளில் 16,63,742 மாதிரிகள் பரிசோதனைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில்
29 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.உலக
பாதிப்புஇன்று (மே 4-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால்
15 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
32 லட்சத்து 27 ஆயிரத்து 188 பேர் பலியாகினர். 13 கோடியே 16 லட்சத்து 15 ஆயிரத்து 229 பேர் மீண்டனர்.
No comments:
Post a Comment