
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிரடியாக வெளியிட்டது அதிமுக. அதில்,
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன், நிலக்கோட்டை தனிதொகுதியில் எஸ். தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்படுகின்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்றும், மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாதகமில்லாத வகையில் தான் அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். 234 தொகுதியும் புரட்சி தலைவர், புரட்சி தலைவி கோட்டை தான். உரிய நேரத்தில், வேட்பு மனு தாக்குதலுக்கு முன்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் அந்த பணிகளை செய்து வருகிறது. எனவே அது தயாரித்த பின் உரிய நேரத்தில், விரைவில் அது வெளியிடப்படும். ராயபுரத்தில், தலைமை கழகத்தில் கட்டளையுடன் 7வது முறையாக போட்டியிட உள்ளேன். 5 முறை வெற்றி பெற்றுள்ளேன். எனவே திமுக, காங்கிரஸ் யார் போட்டியிட்டாலும் 6வது முறையாக மீண்டும் வெற்றி பெறுவேன் என தனக்கு தொகுதி கிடைத்த சந்தோஷத்தில் கூறினார்.
newstm.in
No comments:
Post a Comment