
தமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்பி ஒவைசியின் கட்சிக்கு பட்டம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி கடந்தாண்டு நடைபெற்ற பிஹார் தேர்தலில் 5 இடங்களை கைப்பற்றியது. மேலும் கணிசமான வாக்குகளையும் பிரித்ததால், காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள ஒவைசியின் கட்சி, பிஹாரை தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்குவங்கத்திலும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறது.
இதுதொடர்பாக ஒவைசி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். தமிழகத்தில் அந்த கட்சி 22 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு ஒவைசி கட்சி விண்ணப்பித்திருந்தது. இதையடுத்து, ஒவைசி கட்சிக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் போட்டியிட பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment