
மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மர்மக் காரின் உரிமையாளரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவ்ரி 25-ம் தேதி அன்று முகேஷ் அம்பானியின் 'அன்டிலியா' வீட்டின் அருகே ஒரு ஸ்கார்பியோ கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் உள்ளே சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. வெடிக்கும் தன்மை கொண்ட அந்த ஜெலட்டின் குச்சிகள் சுரங்கம் வெட்டும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவை. அவை தவிர, முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அந்தக் காரில் இருந்தது. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டு இருந்த சிசிடி கேமாராக்களை ஆராய்ந்தபோது, மர்ம நபர் ஒருவர் அந்தக் காரை முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. அவரை போலீஸ் வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில் அந்தக் காரின் உரிமையாளர் மனுசுக் ஹிரென் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் மும்பையின் தானே என்ற பகுதியில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கல்வா ஆற்றில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment