
புதுடில்லி : டில்லிக்கு என, தனி, பள்ளி கல்வி வாரியம் அமைக்க, டில்லி
அரசு ஒப்புதல் அளித்துள்ளது,டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான,
ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்கு, 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளும்,
1,700க்கும்அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப்
பள்ளிகள் அனைத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி
வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.டில்லிக்கு என, தனி பள்ளி கல்வி வாரியம்
அமைக்க, முதல்வர் கெஜ்ரிவால் விரும்பினார். இந்நிலையில், டில்லி அமைச்சரவை
கூட்டம், நேற்று நடந்தது. இதில், டில்லிக்கு, தனி கல்வி வாரியத்தை, வரும்
கல்வியாண்டுமுதல் அமைக்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.இது குறித்து, முதல்வர்
கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில், வரும் கல்வியாண்டு முதல், தனி பள்ளி
கல்வி வாரியம் அமைக்கப்படும்.
இதில், 2,025 பள்ளிகள் இணைக்கப்படும். தனி பள்ளி கல்வி
வாரியம் அமைக்கப்பட்டால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, உள்கட்டமைப்பு
வசதிகளையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment