
மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு முதலாமாண்டு நினைவு நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அதிகாலை கனமழை பெய்தது கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நடூர் ஏ.டி காலனியில் துணிக்கடை அதிபர் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து சுவரை ஒட்டியுள்ள 5 வீடுகள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவம் தமிழகத்தை உலுக்கியதோடு மட்டுமல்லாமல் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவம் ஏற்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைகின்றது. இதனையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதனையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கக் கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா தலைமையில் டிஐஜி நரேந்திரன் நாயர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ர் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 17 பேர் உயிரிழந்த ஏ. டி. காலனி,பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீரவணக்கம் நிகழ்ச்சி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினருக்கு அனுமதி அளிக்கவில்லை. கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஏ.டி. காலனிக்கு சென்று தற்போது துணிக் கடை உரிமையாளர் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சுற்றுப்புற சுவர் மற்றும் அப்பகுதி மக்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய வணிக வளாகத்திலிருந்து சுவர் இடிந்து விழுந்ததில் பலியான 17 பேரின் புகைப்படங்கள் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை எடுத்தபடி பேருந்து நிலையம் சென்று அங்கு கோஷங்களை முழங்கிக் கொண்டே 17 பேரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் வீரவணக்கம் செலுத்திய ஒன்பது பேரை காவர்துறையினர் கைது செய்தனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ராசுதொல்குடி மைந்தன் தலைமையில் கட்சியினர் காவல்துறையினரின் தடையை மீறி அண்ணா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்து வீரவணக்கம் நிகழ்ச்சி செலுத்த வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஒரு பெண் உள்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக மேட்டுப்பாளையத்தில் ஒருவித பரபரப்பான சூழ்நிலை காணப்படுகின்றது. மொத்தத்தில் மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment