
குற்ற நடவடிக்கைகளை குறைக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவீன டிஜிட்டல் உலகில் குற்றவாளிகள் தனது பாதையை மாற்றி மாற்றி குற்றங்கள் செய்து வருவதால், போலீசார் திணறி வருகின்றனர். இதனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை காவல் நிலையம், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் என பலரும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதுவரை, சுமார் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன.
அதேபோல, நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் போலீசார் சட்த்தை மதிக்காமல் அத்துமீறி செயல்படுவதால் லாக்அப் டெத்துகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment