
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை கொரோனா வைரஸால் 6,41,88,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு 14,86,609 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,44,37,980 பேர் குணமந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் துருக்கி 18-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் துருக்கியில் திடீரென கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில், துருக்கியில் ஒரே நாளில் 30,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 6,68,967 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கியில் கொரோனாவால் ஒரே நாளில் 190 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,936 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 4.09 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
துருக்கியில் திடீரென கொரானா வைரஸ் தாக்கம் வேகமாக பரவியதால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
newstm.in
No comments:
Post a Comment