
இலங்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கப்படும் 21000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார் . அந்த மருந்துகளை பயன்படுத்திய பின்னரே கைதிகள் கலவரத்தில் ஆவேசமாக ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவியல் பாதிப்புகள் குறித்த சிகிச்சைகளிற்கான மருந்துகள் அதிகளவில் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது ஏன்? கைதிகளுக்கு வழங்குவதற்காக 21, 000 மாத்திரைகள் மஹர சிறைச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததா? என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
No comments:
Post a Comment