
பொது மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொரு நாடும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டுள்ளது.

இதில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பல நிறுவனங்கள் தயாரித்து இறுதி கட்டத்துக்கு கொண்டுவந்துள்ளன.இதில் முதன் முதலாக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள மருந்து இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்து, அமெரிக்காவிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இதனையடுத்து, இந்தியாவிலும், கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சியல் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனா்ல், இந்தியாவில் விரைவில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் உள்ள பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.இதற்கு எதிர்க்ட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காரணம், தற்போது தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் அறிவிப்பு தவறான நடைமுறை என மாநில தோதல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment