
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரிலிருந்து
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது அனைவருக்கும் தெரியும். இதனை சீன
ஊடகம் ஒன்று திரித்து செய்தி வெளியிட்டது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி
உள்ளது. கடந்த ஆண்டு டிச., மாதம் வவ்வால்களின் இறகு சாம்பிள்கள் வூஹான்
விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
தவறுதலாக இந்த சாம்பிள் வெளியாகி ஆராய்ச்சி நிலையத்தின் அருகே இருந்த
இறைச்சி சந்தையில் கலந்தது.இதனை உட்கொண்ட சீனர்கள் கொரோனா வைரஸ் தாக்கி
பலியாகினர். இந்த வைரஸ் மேலும் பல உயிர்களைக் கொல்லும் என்று சீன மருத்துவ
விஞ்ஞானி லி வெலிங்யாங் எச்சரிக்கை விடுத்ததை சீன கம்யூனிச அரசு
பொருட்படுத்தவில்லை.ஆனால் கொரோனா வைரஸை சோதனை செய்த அவரையே அந்த வைரஸ் பலி
வாங்கியது.
சீனா வழியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ்
உள்ளிட்டவற்றுக்கு பரவிய வைரஸ் அமெரிக்காவில் 3 லட்சம் உயிர்களை தற்போது
பலி வாங்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரிசோதனை கூடத்தில் இருந்து எவ்வாறு
வெளியுலகத்திற்கு பரவியது என்று விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச
கூட்டங்களில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால்
தாங்கள் வைரஸை திட்டமிட்டு உலகுக்கு பரப்பவில்லை என்று சீன கம்யூனிச அரசு
தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஓர்
விஞ்ஞானி கூறிய கருத்தை சீன ஊடகம் ஒன்று திரித்து வெளியிட்டுள்ளது
சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அலெக்சாண்டர் கேக்குலே என்ற ஜெர்மனியைச்
சேர்ந்த பயோகெமிஸ்ட்ரி விஞ்ஞானி கொரோனவைரஸ் வூஹான் நகரிலிருந்து பரவவில்லை
என்று கூறியுள்ளதாக சீன ஊடகமான ஜின்ஹுவா கூறியுள்ளது.இதுகுறித்து
இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அலெக்சாண்டரிடம் விளக்கம்
கேட்டது. சீன ஊடகம், தான் கூறிய கருத்தை திரித்து செய்தி வெளியிட்டு
உள்ளதாகவும் வூஹானில் இருந்து வைரஸ் பரவவில்லையென தான் தெரிவிக்கவே இல்லை
என்றும் அவர் கூறியுள்ளார். சீன ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை இதன்மூலமாக
கேள்விக்கு உள்ளாகியுள்ளது
No comments:
Post a Comment