பரோலில் சென்ற 65 வயதை கடந்த கைதிகள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டாம் என்று கேரள அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கேரளாவில் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து அம்மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சிறையில் இருந்து பரோலில் வீட்டுக்கு சென்றுள்ள 65 வயதை கடந்த கைதிகள் மீண்டும் சிறைக்கு வர வேண்டாம் என்றும், அவர்களுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கேரள அரசு பல்வேறு பிரிவுகளின்கீழ் கைதான குற்றவாளிகளை பரோலில் அனுப்பியது.
ஆனால், குழந்தைகள் மற்றும் கடத்தல் விஷயங்களில் ஈடுபட்டவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதம் போன்ற முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பரோல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

No comments:
Post a Comment