அரசியலைப் பற்றி தெரியாத ரஜினிகாந்த் வீட்டில் ஓய்வு எடுத்து அசிங்கப்படாமல் இருப்பது நல்லது என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. இந்த நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினியை உள்ளே இழுக்க பலமுயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் உலகம் அறிந்த சூப்பர் ஸ்டார். அவர் அரசியல் அறியாதவர், புரியாதவர்.

அவர் அரசியலுக்கு வந்து அவமானங்களையும், அசிங்கங்களையும் அனுபவித்த இன்பத்தை தொலைத்துவிடக்கூடாது என தெரிவித்தார்.
அக மகிழ்வோடு ரஜினிகாந்த் எப்போதும் ஓய்வு எடுக்க வேண்டும் என கருணாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். கருணாஸின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
newstm.in

No comments:
Post a Comment