ஆன்லைன் கேமில் பணம் வெல்ல முடியாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
பெற்றோர் இறந்துவிட்டதால், தனது உறவினர் வீட்டில் வசித்து வரும் ஜெயச்சந்திரனுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அப்போது பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனிடையே , ஆன்லைனில் ரம்மி விளையாட தொடங்கிய ஜெயச்சந்திரன் , வேலைக்கு செல்லாமல் முழுநேரமும் அதிலேயே கவனத்தை செலுத்தி வந்ததாக தெரிகிறது. அதில் பணம் வெல்ல முடியாததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், ஜெயச்சந்திரன் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

No comments:
Post a Comment