மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதில் திராவிட முன்னேற்ற கழகம் உறுதியாக இருப்பதாகவும், கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி சட்டமன்றத்தில், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவும் கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், அனைத்து கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவிக்க...
No comments:
Post a Comment