
மாஸ்கோ: கொரோனா வைரசை தடுக்க ரஷ்யா உருவாக்கிய ''ஸ்புட்னிக் '' தடுப்பு
மருந்து, பரிசோதனையின் போது மனித உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக,
மருத்துவ நாளிதழான தி லான்செட் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அந்த
நாளிதழில் வெளியான செய்தி, ரஷ்ய உருவாக்கிய தடுப்பு மருந்து, 42 நாட்கள்
இரண்டு கட்டங்களாக பரிசோதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு கட்ட பரிசோதனையிலும் 38
பேரிடம் மருந்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவரின் உடலிலும் ஆன்டி
பாடிகள் உருவானதுடன், பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. கொரோனாவை
தடுப்பதில், இந்த மருந்து நீண்ட காலத்திற்கான பாதுகாப்பு மற்றும்
செயல்திறன் குறித்து பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உலகத்தை அச்சுறுத்தி வரும்
கொரோனா வைரசை தடுக்க, தடுப்பு மருந்தை உருவாக்குவதில் இந்தியா உள்ளிட்ட
உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான
தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா முதன்முதலில் அறிவித்தது.
சர்வதேச அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்யும் வரை இந்த
மருந்தை பயன்படுத்த வேண்டாம் என மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment