அதிமுக அவைத் தலைவர் மது சூதனனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அவைத் தலைவர் மது சூதனன், உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் எம்.எல்.ஏ சத்யா, அதிமுக வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் மதுசூதனைனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பரபரப்பான விவாதம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி சில ஆவணங்களை காண்பித்து, அவரது ஒப்புதலை பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அவைத் தலைவர் மதுசூதனனை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அதிமுகவிற்குள் சிறிது சலசலப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு தொடர்பாக, அதிமுக தலைமை கழகத்தில் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment