முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் தனபால் நாளை காணொலி காட்சி மூலம் விசாரணை மேற்கொள்கிறார்.
கடந்த 2017 ம் ஆண்டு ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ். அணி என இரண்டு அணியாக செயல்பட்டபோது, அரசு மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஓ.பி.எஸ். உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகரே உரிய முடிவெடுப்பார் என தெரிவித்தது.
இதையடுத்து 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது 11 உறுப்பினர்களுடன் நாளை காணொலி காட்சி மூலமாக சட்டப்பேரவை சபாநாயகர் விசாரணை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் கேட்பார் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment