தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில்
ரூ. 10லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
நிலைய திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குடிநீர் நிலையத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து குருவிநத்தம் கிராமத்தில் கலையரங்கம் மற்றும் காமநாயக்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியளர்களிடம் பேசுகையில் யூடியூப் போன்ற தொழில்நுட்பங்களை சில விஷமிகள், நாட்டின் ஒற்றுமையை குலைப்பதற்கு பயன்படுத்துவதாக வேதனை தெரிவித்தார். நமது நாடு மதசார்பற்ற நாடு, இறையாண்மைய போற்றுகின்ற நாடு, யார் எந்த மதத்தினை புண்படுத்தினாலும் மக்கள் இயக்கமாக எதிர்க்க வேண்டும். இது போன்றவைகளை பார்க்கவோ, அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வதையோ தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இயக்கமாக மாறினால் இது முற்றிலும் ஒழிக்கப்படும். இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
கருப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு, உரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த மதத்தினை யார் புண்படுத்தினாலும், தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment