சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த மேசான் நகரில் உள்ள
குவோயுவான் எனும் சிறிய கிராமம் சில ஆண்டுகளாக திராட்சை பழங்களை வளர்ப்பதன்
மூலம் 10 கோடி யுவான் அளவுடைய சிறப்புத் தொழில்துறையைக் கொண்டுள்ள
கிராமமாக மாறியுள்ளது.


இதற்காகக்
கிராமத் தலைவர்கள், விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கும் பொருட்டு
சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் வேளாண் நிபுணர்களை அழைத்து சிறப்பு
வளர்ப்புத் திட்டத்தை உருவாக்கினர்.
மேலும், பயிரிடும் அளவை விரிவாக்கும் விதம்
வங்கிகளிலிருந்து கடன் தொகை வாங்க விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றது.
தற்போது, இக்கிராமத்தின் தனிநபர் ஆண்டு வருமானம் 31 ஆயிரம் யுவானைத்
தாண்டியுள்ளது. அதோடு, பொலிவுறு மேலாண்மை அமைப்புமுறையும் சிறப்பாக இயங்கி
வருகின்றது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்

No comments:
Post a Comment