சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
கூறியதாவது : வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான்,
தமிழக மக்களின், அதிமுக, மாற்றுக் கட்சியினரின் எண்ணம்.ஆகவே
நினைவில்லமாக்கப்படும் , அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக
மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இல்லத்தை
நினைவில்லம் ஆக்க வேண்டும் என்ற மக்களின் ஆசை
நிறைவேற்றப்பட்டுள்ளது.தொண்டர்கள் கோயிலாக நினைக்கும் இடம் அந்த இல்லம்.
அதனை நினைவு இல்லமாக்க ஒத்துழைக்க வேண்டும்.
ரஜினியின்
இ பாஸ் விவாகரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர்
கூறியதாவது ; சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.
எந்த பாரபட்சம் கிடையாது. சட்டம் தன் கடமையை
செய்திருக்கிறது. விதி முறைகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் இபாஸ் எடுத்தாரா என்பதற்கு இப்போது வரை ஆதாரம் இல்லை
என்று பதிலளித்தார்.
Newstm.in

No comments:
Post a Comment