
கரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவை
மேலும் நீட்டிக்க வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
வலியுறுத்தியுள்ளா்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி
அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள்
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால்
மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப்
பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக
நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என
அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என
அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்
இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே
அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத
நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாட்டில்
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. பணம் போனால் சம்பாதிக்கலாம்.
பொருளாதாரம் நசிந்தால் மீண்டும் கட்டியமைக்கலாம். ஆனால் அதற்கு மனித
உயிர்கள் இருக்க வேண்டும். உயிர் போனால் மீண்டும் வராது. எனவே நாம் ஊரடங்கை
நீட்டிக்க வேண்டும். எனினும் அப்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு
முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
No comments:
Post a Comment