
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் நாகர்கோவில் பேரூந்து நிலையத்தில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
முதல்
நாளிலேயே காய்கறி வாங்க வந்த ஏராளமான மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.
பெரும் வரவேற்பால் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி பாதை
அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கரோனா
தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ
கல்லூரி மருத்துவமனை தொற்று நோய் பிரிவான கரோனா வார்டில் கரோனா பாதித்த 6
பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில்
மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை நகராட்சியினர், மற்றும்
பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், மற்றும்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், மற்றும்
கரோனா பாதித்தோரின் உறவினர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இவர்களில்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 20 நாட்களக்கு மேல் தனிமைப்படுத்தலில் இருந்து
பரிசோதித்த பின்பு அவர்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டனர்.
இதனால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது 2500 பேர் வரை மட்டுமே
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கிற்கு மத்தியில்
அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் அதிகம் வரும் இடமான நாகர்கோவில் வடசேரி
பேரூந்து நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை அருகே கிருமி நாசினி
தெளிப்பான் பாதை அமைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில் மாநகராட்சி
மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த கிருமி நாசினி பாதை இன்று முதல் நடைமுறைக்கு
வந்தது. முதல் நாளிலேயே காய்கறி வாங்க வந்த ஏராளமான பெண்கள், பொதுமக்கள்
கிருமி நாசினி தெளிப்பான் பாதை வழியாக சென்று பயனடைந்தனர்.
கிருமி
நாசினி பாதைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் ஆரல்வாய்மொழியில்
தற்காலிக காய்கறி சந்தை செயல்படும் நகர பூங்கா அருகில் கிருமி நாசினி
சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது.
இதைப்போல்
மார்த்தாண்டம், கன்னியாகுமரி, களியக்காவிளை உட்பட முக்கிய பகுதிகளில்
கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைப்பதற்கான முயற்சியை உள்ளாட்சித்துறையினர்
மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment