ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில்
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் நிகழ்வதாக காவல் துறைக்கு புகார்கள்
குவிந்து வருகின்றன. அதன் மீது விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என்று கூடுதல் ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக
பேசிய அவர், இந்த ஊரடங்கு அமலில் இருக்கின்றபோது, பெண்கள் மீது வன்முறைகள்
ஏவப்படுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அப்படி யாராவது
பெண்கள் மீது குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தருணத்திலே பெண்கள் மிகவும் கடினமாக
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை பாராட்ட வேண்டுமே ஒழிய, அவர்கள் மீது வன்முறையை ஏவினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் 181, 1091, 100
உள்ளிட்ட தொலைபேசி எண்களின் மூலமாகவோ, காவலன் ஆப் மூலமாகவோ தகவல்
தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment