
புவனேஸ்வர்; முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ 200 அபராதம்
விதிக்கப்படும் என ஒடிசா அரசு எச்சரித்துள்ளது.கொரோனா ஒடிசாவில் பரவி
வருவதையடுத்து, அது சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் விதமாக மாநிலத்தில்
வரும் ஏப்., 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்
முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்படும்
என்று மாநில அரசு எச்சரித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வர தடை
விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் கொண்டு
செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள்,
தொழிற்சாலைகள், கல்விநிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் அனைத்திற்கும் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் இல்லாமல் முதல் 3 முறை பிடிபட்டால் ரூ 200
அபராதமும் அதற்கு மேல் தொடர்ந்தால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என மாநில
அரசு எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment