
டெல்லி: COVID-19 தொற்றுநோயால் நாடு மிகவும் சவாலான சூழ்நிலையை
எதிர்கொள்கிறது. பல பகுதிகள், சமூக விலகலை செயல்படுத்த நாடு முழுக்க
லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியை சமாளிக்க, தொழிலாளர் அரசு
காப்பீட்டுக் கழகம் (ESIC) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் 1042 தனிமை படுக்கைகளுடன் பின்வரும் ESIC மருத்துவமனைகள் கோவிட் -19 மருத்துவமனைகளாக
அறிவிக்கப்பட்டுள்ளன:
a. ESIC மருத்துவமனை, அங்கலேஷ்வர், குஜராத்: 100 படுக்கைகள்
b. ESIC மருத்துவமனை, குருகிராம், ஹரியானா: 80 படுக்கைகள்
c. ESIC மருத்துவமனை, வாபி, குஜராத்: 100 படுக்கைகள்
d. ESIC மருத்துவமனை, உதய்பூர், ராஜஸ்தான்: 100 படுக்கைகள்
e.
ESIC மருத்துவமனை, ஜம்மு: 50 படுக்கைகள்
f. இஎஸ்ஐசி மருத்துவமனை பாடி, இமாச்சல பிரதேசம்: 100 படுக்கைகள்
g. இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை, ஆதித்யாபூர், ஜார்க்கண்ட்: 42 படுக்கைகள்
h. ESIC மருத்துவமனை, ஜோகா, மேற்கு வங்கம்: 470 படுக்கைகள்
மேலே குறிப்பிட்டதை தவிர, மீதமுள்ள பெரும்பாலான மறுத்துவமனைகளில் சுமார் 1112 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் உள்ள மருத்துவமனைகள் லிஸ்ட்:
ESIC மருத்துவமனை, ஃபரிதாபாத் (ஹரியானா)
ESIC மருத்துவமனை, ஆல்வார் (ராஜஸ்தான்): 444 படுக்கைகள்
ESICHospital, பிஹ்தா, பாட்னா (பீகார்): 400 படுக்கைகள்
ESIC மருத்துவமனை, குல்பர்கா (கர்நாடகா): 240 படுக்கைகள்
ESIC மருத்துவமனை, கோர்பா (சத்தீஸ்கர்): 100 படுக்கைகள்
இந்த
மோசமான காலகட்டத்தில், ESI பயனாளிகளின் சிரமங்களை எளிதாக்கும் பொருட்டு,
தனியார் மெடிக்கல்களிலும், மருந்துகளை வாங்கிக்கொள்ள
அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் பின்னர் திருப்பிச் செலுத்தப்படும்.
source: oneindia.com
No comments:
Post a Comment