
மத்தியரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம், மக்கள்
பதிவு சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும்
போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது சிறுபான்மை
மக்கள் தான் என்பதால் அவர்கள் போராட்டத்தில் முன்னணியில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை கலைக்க வேண்டும்மென காவல்துறை திடீரென நடத்திய தடியடியில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட பஸ் லுல் ஹக் என்பர் பலியானார். இதனால் தமிழகம் முழுவதும் அன்று இரவு போராட்டம் நடைபெற்றது. அதோடு தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நசுக்க தடியடி நடத்தி அராஜகமாக நடந்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த லுல்ஹக் குடும்பத்திற்கு 5 கோடி நிதி வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அதனை செய்யவில்லையென்றால் நீதிக்கேட்டு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் நாசீர் கான் வாணியம்பாடியில் அறிவித்தார்.
No comments:
Post a Comment