
மலேசியாவில் உள்ள பழைய பாலம் ஒன்றை கிரேன் ஒன்றை ஏற்றிவந்த பிரம்மாண்ட லாரி ஓன்று இடித்ததில், பாலத்தின் கூரை ஆட்டம் கண்டு சரிய தொடங்கிய காட்சி வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
மலேசியாவில் உள்ள பினாங்கு என்னும் பகுதியில் இருக்கும் வெல்ட் குவாய் என்ற இந்த பெடஸ்ட்ரியன் பாலம் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகாலமாக இடியாமல் நின்றுகொண்டிருந்த இந்த பாலத்தை அவ்வழியே 16 அடி உயரம் கொண்ட கிரேன் ஒன்றை ஏற்றி வந்த லாரி இடித்ததை அடுத்து, பாலம் மளமளவென சரிய தொடங்கியது.
லாரியில் சிக்கி பாலம் சரிய தொடங்கியதை அடுத்து லாரியின் பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் தங்கள் வாகனகளை நிறுத்திவிட்டு ஓடத்தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment