
புது தில்லி: குடியரசு தினத்துக்காக
இன்று தேசியக் கொடியை உயா்த்தும் நாம், குடியுரிமைத் திருத்தச்
சட்டத்துக்கு(சிஏஏ) எதிரான நமது போராட்டங்களின் தீவிரத்தையும் அதிகரிக்க
வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
நாட்டின்
71-ஆவது குடியரசு தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்
அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மாணவர்களுக்கும்
இளைஞர்களுக்கும் என் வணக்கம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவானது,
அந்த ஆவணத்தின் 3-ஆவது பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ள சுதந்திரத்தைச்
சாா்ந்துள்ளது. அந்த சுதந்திரம், மக்களால் மக்களுக்காகவே அளிக்கப்பட்டது.
அதை எந்தவொரு அரசும் அவா்களிடம் இருந்து தட்டிப் பறிக்க இயலாது.
ஆனால்,
எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி கடந்த 6 மாதங்களாக தடுப்புக் காவலில்
வைக்கப்பட்டுள்ளவா்கள் உள்பட, காஷ்மீா் பள்ளத்தாக்கைச் சோந்த 70 லட்சம்
மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதை நாம் இன்று நினைவுகூர வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது தேசத் துரோகம் உள்பட அராஜகமான
குற்றச்சாட்டுகளை மத்திய அரசு சுமத்துகிறது.
நாட்டிலுள்ள
எந்தவொரு பிரிவு மக்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டாலும், அது ஒட்டுமொத்த
மக்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டதாகவே அா்த்தமாகும். இந்தியக் குடியரசை
மீட்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்
வேண்டுமோ? பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரிக் குளறுபடி, குடியுரிமைத்
திருத்தச் சட்டம் ஆகியவை ஒரு சர்வாதிகார அரசனின் நடவடிக்கைகளை நினைவு
படுத்துகின்றன. இந்தியா ஒரு குடியரசு, முடியரசு அல்ல. யாருக்கும் இங்கு
முடி சூட்டவில்லை. யாரும் இங்கு மன்னரில்லை.
குடியரசு
தினத்துக்காக இன்று தேசியக் கொடியை உயா்த்தும் நாம், குடியுரிமைத்
திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏ) எதிரான நமது போராட்டங்களின் தீவிரத்தையும்
அதிகரிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment