
நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் வேளையில்
இன்று 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிஏஏவுக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக
பாலிவுட் முக்கிய பிரபலங்களான ஆமீர் கான், ஷாருக் கான் உள்ளிட்டோர்
இதுதொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று குற்றச்சாட்டு
எழுந்தது.
படப்பிடிப்புக்காக தமிழகம்
வந்திருந்த ஆமீர் கானிடம் கூட இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி
எழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் சென்றார். இதற்கிடையே, நேற்று இரவு
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக் கான் மதம்
குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
அவரின் அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில்
``வீட்டில் நாங்கள் மதம் குறித்து பேசியது கிடையாது. நான் ஒரு முஸ்லிம்
என்றாலும், என் மனைவி இந்து. என் குழந்தைகள் இந்தியர்கள் என்றே வாழ்ந்து
வருகிறோம். என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபோது, நான் மதப் பிரிவை நிரப்ப
வேண்டியிருந்தது. அப்போது என் மகள் என்னிடம் 'நம் மதம் என்ன?' என்று
கேட்டாள். அதற்கு நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும்
இந்தியர்கள் என்று படிவத்தில் இந்தியன் என்று எழுதினேன். அவர்கள்
இந்தியர்கள் தான்.
இந்து மற்றும் முஸ்லிம் அல்ல. எங்களுக்கு வேறு
மதம் இல்லை." என்றவர், ``நான் தினமும் ஐந்து முறை தொழுகையில்
ஈடுபடுவதில்லை. ஆனாலும் நான் ஒரு இஸ்லாமியன். நான் இஸ்லாத்தின் கொள்கைகளை
நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று
நான் நம்புகிறேன்"என்றார். அவர் பேசி முடிக்கவும் அரங்கில் இருந்தவர்கள்
பேச்சுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
No comments:
Post a Comment