
திகார் சிறையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் இன்று (செவ்வாய்கிழமை)
உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நிர்பயா வழக்கின்
குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்
தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை
அனுப்பியிருந்தார். அந்த மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால்
கடந்த 17-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து,
கருணை மனு நிராகரிப்பை நீதித்துறை மறுஆய்வு செய்யக் கோரி முகேஷ் சிங்
தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25-ஆம் தேதி மனுத் தாக்கல்
செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை வழங்குகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, முகேஷ் சிங் சார்பில் அவரது வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்ததில்,
"திகார்
சிறையில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். சக குற்றவாளியான
அக்ஷய்யுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. பல
முறை நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். நான் கூறிய இவை எதுவும் குடியரசுத்
தலைவர் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திகார்
சிறை அலுவலர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த முகேஷ்
தரப்பு வழக்கறிஞர், "மற்ற சிறைக் கைதிகளுக்கு முன் மனுதாரர் உடலுறவு
வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு மரண தண்டனைதான்
விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என்றா
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது?" என்று வாதாடினார்.
No comments:
Post a Comment