கடந்த மாதம் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை
எதிர்த்து நாடெங்கும் இன்னும் போராட்டங்கள் நடந்துதான் வருகின்றன.
குறிப்பாக,
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியின் ஷாஹீன் பாஹ்
பகுதியில் நடந்து வரும் தொடர் போராட்டங்கள் மத்திய அரசுக்குப் பெரும்
சவாலாகவே உள்ளன.
இந்த நிலையில், இந்தத் தொடர் போராட்டங்களை
காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், அப்போராட்டங்களுக்குத்
தேவையான அத்தனை செலவுகளையும் அக்கட்சிதான் கவனித்துக் கொள்கிறது என்றும்
பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், இது தொடர்பான ஒரு வீடியோவை பாஜகவின் ஐ.டி.
அந்த வீடியோவில் ஒரு கடையின் முன்பாக நின்று
இருவர், "இந்தப் போராட்டங்களெல்லாம் சும்மா... காங்கிரஸ் கட்சிதான் இந்தப்
போராட்டங்களுக்கு முழுக்க முழுக்க செலவு செய்து வருகிறது" என்று பேசிக்
கொண்டிருக்கின்றனர்.
இப்போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள
ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.500 முதல் ரூ.700 வரை வழங்கப்படுவதாகவும், அது
தவிர அவர்களுக்கு பிரியாணி, டீ உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது என்றும்
அந்த இரு நபர்களும் அவ்வீடியோவில் பேசுகின்றனர்.
குறிப்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஷிஃப்ட் முறையில் போராட்டங்களை
நடத்தி வருகிறார்களாம். வீட்டுக்குப் போய் சமைத்து விட்டு வந்து
போராட்டத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறார்களாம்; சில பெண்கள் தங்கள்
ஒரு-வயது குழந்தைகளுடன் அமர்ந்தும் 'போராடுகிறார்களாம்'.
இவர்கள் எல்லோருமே காங்கிரஸ் ஆட்கள்தான் என்று அந்த இரு நபர்களும் வீடியோவில் பேசிக் கொள்கின்றனர்.
இந்தத்
தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக, பஞ்சாப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான
சீக்கிய விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 'லாங்கர்'
எனப்பட்டும் மதிய உணவைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment