
சமூக ஊடகங்களில் அவதூறான, ஆபாச கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஆபாச கருத்தைப்
பதிவிட்ட மருதாசலம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணையின்போது, சமூக ஊடகங்களில் தொடர்ந்து
ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும்
வழக்கு விசாரணை நடைபெற்ற 22ம் தேதி மாலைக்குள் பத்து நபர்களின் பெயர்கள்
அடங்கிய பட்டியலை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது. சென்னை சைபர் கிரைம் தரப்பிலிருந்து கால அவகாசம்
கேட்கப்பட்டது கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வருகிற 29-ஆம் தேதிக்குள்
பட்டியலைத் தயார் செய்து அளிக்கும்படி சைபர்கிரைம் ஏடிஜிபி-க்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment