
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள
களியப்பேட்டையில் பெரியாா் சிலையை சேதப்படுத்தியவரை சாலவாக்கம் போலீஸாா்
ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம்
மாவட்டம் சாலவாக்கம் அருகே களியப்பேட்டையில் இம்மாதம் 24 ஆம் தேதி
பெரியாா் சிலை மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது.சிலை
சேதமடைந்திருப்பதை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்து காவல்துறைக்கும் தகவல்
தெரிவித்தனா். சிலையை சேதப்படுத்தியவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பாக
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திராவிடா் கழகத்தைச் சோந்தவா்கள் சனிக்கிழமை
சாலை மறியலும் செய்தனா்.சம்பவம் தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா்
வழக்குப்பதிவு செய்து சேதப்படுத்தப்பட்ட சிலையை 24 ஆம் தேதி மாலையே
சீரமைத்தனா்.
சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை போலீஸாா்
தேடி வந்த நிலையில் அதே களியப்பேட்டை கிராமத்தைச் சோந்த கோவிந்தன் மகன்
கோ.தாமோதரன்(36) என்பவரை சிலையை சேதப்படுத்தியதாக காவல்துறையினா் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.இவ்வழக்கில் மேலும் சிலரிடமும் விசாரணை
நடந்து வருவதாகவும் நம்பத்தகுந்த காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment