
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை
35க்கு அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளிலிருந்து 45 பேர்
மீட்கப்பட்டுள்ளனர். 6.8 ரிக்டர் அளவு கொண்ட அந்த நிலநடுக்கம் நேர்ந்த
எலாஸிக் வட்டாரத்தில் மூன்று இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. பெரிய
இயந்திரங்களைக் கொண்டு அதீத குளிரில் பணியில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள்.
வெள்ளிக்கிழமை நேர்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் 31 பேர் எலாஸிக்கைச்
சேர்ந்தவர்கள்.
மேலும் நால்வர் மலாத்யா
வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவ்வட்டாரத்தில்
700க்கும் மேலான அதிர்வுகள் நேர்ந்தன. மீட்புப் பணிகளில் உதவ துருக்கியின்
மற்ற பகுதிகளிலிருந்தும் நெருக்கடிநிலை ஊழியர்கள் எலாஸிக்கைச்
சென்றடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் 645 கட்டடங்கள் அதிகச்
சேதமடைந்துள்ளதாகவும் 76 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment