Latest News

சிஏஏவால் பல லட்சம் மக்கள் நாட்டை இழப்பார்கள்.. ஐரோப்பாவில் 150 எம்பிக்கள் தீர்மானம்.. எச்சரிக்கை!

லண்டன்: இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் காரணமாக பல லட்சம் மக்கள் நாட்டை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என்று ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 150 எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இந்த மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். ஆனால் இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.

தீர்மானம்
என்ன தீர்மானம்
இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 150 எம்பிக்கள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். இந்த தீர்மானத்தின் நகல் தற்போது வெளியாகி உள்ளது. ஐந்து பக்கங்களை கொண்ட அந்த தீர்மானத்தில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சிஏஏ அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனால் பல லட்சம் நாடுகளை இழக்கும் மோசமான நிலை ஏற்படும்,.

மக்கள்
மக்கள் நிலை
பல லட்சம் மக்கள் அகதிகளாக மாறும் நிலை உருவாகும். இந்தியா தங்கள் குடிமகன்களை தீர்மானிக்கும் முறையே இதனால் மோசமான நிலைக்கு மாறும். பல லட்சம் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் தற்போது சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இதை யார் எதிர்த்தாலும் அவர்களின் குரல் மொத்தமாக ஒடுக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்புகள் அமைதியாக்கப்படுகிறது.

குரல்
குரல் தர வேண்டும்
பத்திரிக்கையாளர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு எதிராக ஐரோப்பா குரல் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக சர்வதேச நடவடிக்கைகளை ஐரோப்பா எடுக்க வேண்டும். இந்தியா சர்வதேச ஐநா விதிகளை மீறியுள்ளது. உலகில் எல்லோருக்கும் குடியுரிமை பெற உரிமை உள்ளது. மதத்தை காரணம் காட்டி குடியுரிமையை ரத்து செய்ய கூடாது.

அரசு
அரசு முடியாது
குறியுரிமையை தேர்வு செய்வது என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதில் அரசு தலையிட முடியாது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை ஐநாவே கண்டித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவிற்கு எதிராக ஐரோப்பா செயல்பட வேண்டும், என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். இந்த தீர்மானம் நிறைவேறினால், அது இந்தியாவிற்கு பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

source: oneindia.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.