
வாலாஜாவில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற
முப்படைகள் சந்திப்பு கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
எம்.பி கலந்து கொண்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ” காஞ்சிபுரம்
அருகே உள்ள கிராமத்தில் பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த
சம்பவத்தை பா.ம.க. கண்டிக்கிறது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுதேர்வு
தேவையற்றது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாய
தேர்ச்சி என்று விதிகள் இருந்தது. பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் சமூக
நீதி நமக்கு கிடைத்திருக்காது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பலவகை
போராட்டங்களை நடத்தி வந்தவர். இந்த சம்பவங்கள் நடந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.
ரஜினி பெரியார் பற்றி பேசியதை தவிர்த்து இருக்கலாம்.
தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. எனவே இந்த
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து 50 ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயத்தை
இன்றைய சூழலுக்காக விவாதம் செய்வது தேவையில்லை ” என்று கூறினார்.
No comments:
Post a Comment