
மயிலாடுதுறை: நாட்டை மொழி, இனம் மற்றும் மதத்தால் பாஜக அரசு
பிளவுபடுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:
மத்தியில்
ஆளும் பாஜக ஆட்சியின் இரு கண்களாக இந்தியும் சமஸ்கிருதமும்தான்
இருக்கிறது. இந்த நாட்டை மொழி, இனம், மதத்தால் பாஜக பிளவுபடுத்தி
கொண்டிருக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமைந்தது முதல் இந்தியை திணிக்கிற முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் குடியுரிமை சட்ட திருத்தத்தால் மத ரீதியாக மக்களை பிரிக்கிறது பாஜக.
இச்சட்ட
திருத்தத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள்
தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக வாயே திறக்கவில்லை.
குடியுரிமை சட்ட திருத்தம் குறித்த
மக்களின் கருத்துகளைப் பெற்று அதை ஜனாதிபதிக்கு திமுக அனுப்பி வைக்க
உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
மேலும் தமிழக அரசு மீது பல்வேறு
ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ஸ்டாலின், தாம் முதல்வராக
பொறுப்பேற்ற உடன் முதல் பணியாக இந்த ஊழல்களை வெளிப்படுத்துவோம் என்றார்.
source: oneindia.com
No comments:
Post a Comment