புது தில்லி: உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சா்
அப்துல்லாஸிஸ் கமிலோவ் உடன் தில்லியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
இன்று பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதுதொடா்பாக அமைச்சா்
ஜெய்சங்கா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 'உஸ்பெகிஸ்தான் வெளியுறவு
அமைச்சரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான
பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம்' என்று
குறிப்பிட்டிருந்தாா்.
சுட்டுரையில்
அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், 'ஓமன் சுல்தான் காபூஸ் சயீது பின் சயீது
மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்தியாவுக்கு சிறந்த
நண்பராகவும், நலம் விரும்பியாகவும் இருந்தவா் காபூஸ் சயீது' என்று
ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் ஓமனை ஆண்டு
வந்த அவா், மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அரபு மற்றும் மேற்காசியப்
பிராந்தியத்தைச் சோந்த மன்னா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓமன் அரசாட்சியை நிறுவிய அல் சயீது பரம்பரையில் காபூஸ் பின் சயீது 14-ஆவது சுல்தான் ஆவாா்.

No comments:
Post a Comment