
நியூயார்க்: இன்றைய காலம் மிகவும் வேகமானது. எங்கு எது நடந்தாலும்
உடன் உலகம் முழுவதும் பரவிவிடும். அந்த வகையில் வாத்து ஒன்று மீன்களுக்கு
உணவளிக்கும் வீடியோதான் தற்போது செம வைரல். பல லட்சக்கணக்கான பேர் இதை
பார்த்து ரசித்துள்ளனர்.
தண்ணீரிலுள்ள மீன்களுக்கு வாத்து ஒன்று தானியங்களை தனது வாயால் எடுத்து கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த
வீடியோ காட்சியில், தானியங்கள் வைக்கப்பட்ட இடத்தில் வாத்து ஒன்றும், புறா
ஒன்றும் உணவருந்தும் காட்சியும், அதில் வாத்து மட்டும் தண்ணீரில்
இருக்கும் மீன்களுக்கு தானியங்களை தனது வாயால் எடுத்து கொடுக்கும்
காட்சியும் உள்ளன.
அந்த வீடியோ காட்சி
எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தோ, அல்லது அதை பதிவு செய்த நபர்
குறித்தோ தகவல் வெளியிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக
பரவி வருகிறது. இதுவரை அந்த வீடியோவை சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர்
பார்வையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment